Tamil News  /  Nation And-world  /  World Cup Final Ahmedabad Airport To Close Airspace Ahead Of Ind Vs Aus Match

World Cup final: ஏர் ஸ்பேஸை தற்காலிகமாக மூடிய அகமதாபாத் விமான நிலையம்.. விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil
Nov 19, 2023 02:09 PM IST

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ICC ODI உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு இந்திய விமானப்படையின் வான் சாகசம் காரணமாக 45 நிமிடங்களுக்கு வான்வெளி மூடப்படும்.

இந்திய விமானப் படையின் சாகசம் (Photo by Punit PARANJPE / AFP)
இந்திய விமானப் படையின் சாகசம் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

45 நிமிடங்கள் வான்வெளி மூடப்பட்டது. SVPI இன் படி, வான்வெளி 13:25 முதல் 14:10 மணி வரை மூடப்பட்டிந்தது. இந்திய விமானப்படையின் வான் காட்சி காரணமாக வான்வெளி மூடப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SVPI விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு, பயணம் தொடர்பான சம்பிரதாயங்கள் மற்றும் கட்டாய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. வான்வெளி மூடல் காரணமாக பயணிகள் தங்கள் விமான அட்டவணையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், ”என்று அது கூறியது.

அகமதாபாத்தில் வான்வெளி மூடப்படுவதால், நகரத்திற்கு வந்து செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் என்று ஆகாசா ஏர்லைன்ஸ் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

"ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியின் காரணமாக, 19 நவம்பர் 2023 அன்று அகமதாபாத்தில் வான்வெளி மூடப்பட்டதால், 13:15 மணி முதல் 14:10 மணி வரை, அகமதாபாத்தில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம்" என்று விமான நிறுவனம் X இல் பதிவிட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் காணவுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண அசாம் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று வரவுள்ளனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஞானேந்திர சிங் மாலிக் உறுதிப்படுத்தினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்காக வெளியில் இருந்து கிட்டத்தட்ட 2000 போலீஸாரை அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“...கிட்டத்தட்ட 2000 பொலிஸாரை வெளியூர்ல இருந்து வரவழைச்சிருக்கோம்... ஒட்டு மொத்தமா 6,000க்கும் மேல போலீஸ் படையை பயன்படுத்துறோம்... துணை ராணுவம் (படை) வேற... தண்ணீர் ஏற்பாடுகள், இதர எல்லா வேலைகளும் செய்யப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸ் ட்ரிங்க்ஸ் இடைவேளையின் போது குஜராத்தி பாடகர் ஆதித்யா காத்வி முதல் இன்னிங்ஸ் ப்ரீதம், ஜோனிதா காந்தி, நகாஷ் அஜீஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங், துஷார் ஜோஷி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் 2003ல், தென்னாப்பிரிக்காவில் நடந்த 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. பின்னர் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸி., சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியிருந்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்