World AIDS Day : ஆணிடமிருந்தே பெண்ணுக்குப் பரவும்.. அறிகுறிகள் இதுதான்.. உலக எய்ட்ஸ் தினம் இன்று!
எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணப்படுத்த முடியாதது. ஆனால் நோயின் தாக்கத்தை தடுக்க ஒருவர் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன

பொதுவாகவே எய்ட்ஸ் என்றாலே பலரும் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர். உடலுறவால் தான் இந்த நோய் வருகிறது என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதனால் மட்டும் இந்த நோய் வருவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதேபோல இந்த நோய் ஒருவர் தொடுவதால் பரவக்கூடியது அல்ல. ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் பான் ஆகியோரால் கொண்டுவரப்பட்டது.
எய்ட்ஸ் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் மோசமான தொற்று. இது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை இந்த வைரஸ் அழித்து பலவீனப்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக நோயெதிர்ப்பு குறைபாடுடையவர்களாக மாறுவார்கள். இதற்கு உரிய சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழக்கவும் நேரிடலாம்.