கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தை பெற்ற பெண்..நடுவானில் ட்விஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தை பெற்ற பெண்..நடுவானில் ட்விஸ்ட்!

கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தை பெற்ற பெண்..நடுவானில் ட்விஸ்ட்!

Karthikeyan S HT Tamil
Dec 15, 2022 01:36 PM IST

woman gave birth on plane: விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் எதிர்பாரத விதமாக குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையுடன் தாமரா
குழந்தையுடன் தாமரா

ஈக்வாடார் நாட்டில் இருந்து கேஎல்எம் ராயல் டச் என்ற பயணிகள் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்தது. அதில், பயணிகளுடன் தாமரா என்ற பெண் ஒருவரும் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நடுவானில் அப்பெண்ணுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் அந்த பெண் அலறி துடித்ததும் அருகில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று திகைத்தனர்.

உடனே அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவரான மாக்சிமிலியான என்ற பெண் தாமராவுக்கு உதவ முன்வந்துள்ளார். உடனே தாமராவை கழிவறைக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை சோதனை செய்ததில் தாமரா கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பிரசவிக்க உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையறித்தும் தாமராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஏனென்றால் அவர் கர்ப்பமாக இருப்பது அவருக்கே தெரியாதாம்.

இப்படிபட்ட சூழலில், மாக்சிமிலியானா, அதே விமானத்தில் இருந்த அமெரிக்க மருத்துவர்கள் இருவர் மற்றும் செவிலியர் ஒருவர் உதவியுடன் தாமரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் தரை இறங்கியதும் அங்குள்ள மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் உள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனக்கு உதவிய மாக்சிமிலியானாவின் பெயரையே இக் குழந்தைக்கு சூட்டியுள்ளாராம் தாமரா. 

ஹார்மோன் குறைப்பாட்டால் வரும் cryptic pregnancy ஆல் கருவுற்றது தெரியாமல் அவர் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விமான பயணத்தின் போது கருவுற்ற சில பெண்களுக்கு குழந்தை பிறப்பது அரிதினும் அரிதாக நடந்தாலும், தான் கருவுற்றதே தெரியாமல் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.