கேலி செய்வார்களோ என்ற அச்ச உணர்வில் வாழ்கிறோம்! தலைமை நீதிபதி சந்திரசூட்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கேலி செய்வார்களோ என்ற அச்ச உணர்வில் வாழ்கிறோம்! தலைமை நீதிபதி சந்திரசூட்

கேலி செய்வார்களோ என்ற அச்ச உணர்வில் வாழ்கிறோம்! தலைமை நீதிபதி சந்திரசூட்

Kathiravan V HT Tamil
Mar 04, 2023 09:44 PM IST

தற்போது நாம் வாழும் காலத்தில் மக்களிடம் பொறுமை என்பது இல்லை. சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைந்து இருக்கிறது.

தலைமை நீதிபதி சந்திரசூட்
தலைமை நீதிபதி சந்திரசூட்

டெல்லியில் “உலகமயமாக்கல் காலத்தில் சட்டம்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் தற்போதய நிலை குறித்து வேதனையுடன் பேசினார்.

அதில் “யாராவது கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்ச உணர்வுடன் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் செய்து வருகிறோம். நான் சொல்லும் இந்த விஷயத்தை நம்புங்கள். உங்களை கேலி கிண்டல் செய்யும் நபர்கள் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது கிடையாது. தற்போது நாம் வாழும் காலத்தில் மக்களிடம் பொறுமை என்பது இல்லை. சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைந்து இருக்கிறது. பொறுமை குறைவாக உள்ளது என்று சொல்லும்போது சுருக்கமாக நான் பேச வேண்டும் என்று நினைவூட்டுகிறது.

வேறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே நாம் தயாராக இல்லை. மக்களிடம் சகிப்புத் தன்மை என்பதும் குறைவாகவே இருக்கிறது. குறுஞ்செய்திகளை பதிவிடும் உலகில் மிகப்பெரிய ட்விட்டர் சமூக ஊடகத்திலும் கேலி, கிண்டல் செய்யும் பிரச்னைகள் அதிகமாக இருக்கின்றன. இதனை தடுப்பதற்கு கடுமையான சோதனைகளும் நடைமுறைகளும் உள்ளன.

ஆனால் இது போன்ற நபர்களுக்கு யார் வேண்டுமானாலும் இஅலக்காகும் நிலை இருக்கிறது. இத்தகைய கேலியும் கிண்டலும் தாக்குதல்களில் கூட சில சமயங்களில் முடிந்துவிடுகிறது. நீதிபதிகள், நீதிமன்றங்களின் நடைமுறைகள் உட்பட ஒவ்வொரு விவகாரமும் சமூகவலைத்தளங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இதனை கருத்தில் கொண்டே சமூக ஊடகங்களில் ஒழும்க்குமுறை வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. சமூக ஊடகங்களை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக மக்கள் பயன்படுத்தி வரும் சிக்கல்களையும் உச்சநீதிமன்றம் அடையாளம் கண்டு இருக்கிறது.

பெண் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் அதிகளவில் நியமனம் செய்வதை நிச்சயமாக நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது ஒரு சிக்கலான விஷயம்” என்றார். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்தும் பெண் நீதிபதிகள் நியமனம் தொஅர்பாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த இக்கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.