HBD Warren Buffett: ’பணம் கொட்டும் பங்குச் சந்தையில் அசத்த வேண்டுமா?’ வாரன் பஃபெட் தரும் டாப் 10 டிப்ஸ்!
Warren Buffett: "முதலீட்டில் பிறர் பேராசையுடன் இயங்கும்போது நீங்கள் பயப்படுங்கள் ஆனால் மற்றவர்கள் பயப்படும்போது பேராசையுடன் இருங்கள்" என்ற வாரன் பஃபெட்டின் கவர்ச்சிகரமான முதலீட்டு அறிவுரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துடிக்கும் ஒவ்வொருவருக்குமான அரிச்சுவடி.
HBD Warren Buffett: ’பங்குச்சந்தையில் அசத்த வேண்டுமா?’ வாரன் பஃபெட் தரும் டாப் 10 டிப்ஸ்! (REUTERS)
பங்குசந்தையின் பிதாமகன் என்று அழைக்கப்படும் அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட், எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவர். உலகளாவிய செல்வப் பட்டியலில் தொடர்ந்து முக்கிய இருக்கும் நிகர மதிப்புடன், பஃபெட்டின் முதலீட்டு உத்திகள் மற்றும் ஆலோசனைகள் இளம் தலைமுறையினர் பலரையும் கவர்ந்துள்ளது.
பேப்பர் போடும் சிறுவன்
1930 ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்காவின் ஒமாஹா பகுதியில் வாரன் எட்வர்ட் பஃபெட் பிறந்தார். சிறு வயதிலிருந்தே, எண்கள் மற்றும் வணிகத்தின் மீதான அவரது ஈடுபாடு அவரை முதலீட்டு பயணத்தை நோக்கி நகர்த்தியது.
சிறுவயதில் மொத்த விலையில் சூயிங்கம் வாங்கி, அவற்றை வீடு வீடாக விற்றார். செய்தித்தாள்கள் விற்பது தொடங்கி பின்பால் இயந்திரங்களை விற்பது வரை சிறு வயதிலேயே செல்வத்தை குவிப்பதில் ஆர்வம் கொண்டார்.