Vinayagar idols immersion: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 20 பேர் உயிரிழப்பு-vinayagar idols immersion 20 lose their lives during immersion in maharashtra - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Vinayagar Idols Immersion: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 20 பேர் உயிரிழப்பு

Vinayagar idols immersion: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 20 பேர் உயிரிழப்பு

Karthikeyan S HT Tamil
Sep 11, 2022 01:40 PM IST

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் 20 பேர் உயிரிழந்தனர்.

<p>விநாயகர் சதுர்த்தி விழா, மும்பை</p>
<p>விநாயகர் சதுர்த்தி விழா, மும்பை</p>

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த மாதம் 31ம் தேதி மகராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியாக வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகளை கரைத்த போது, வார்தா மாவட்டம் சவாங்கி கிராமத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் தேவ்லி நகரில் ஒருவரும் உயிரிழந்தனர். தாணே மாவட்டம் கோல்பாட் பகுதியில் விநாயகர் பந்தல் மீது மரம் சாய்ந்து விழுந்தததில் 55 வயது பெண் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

அகமது நகர், யவத்மால், வார்தா மாவட்டங்களில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதுபோல மாநிலத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது விபத்து மற்றும் நீரில் மூழ்கி 20 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.