Guinness World Record: அடேங்கப்பா எவ்ளோ நீ....ளமான கூந்தல்.. கின்னஸ் சாதனை படைத்த உ.பி., பெண்!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண்ணுக்கு உலகின் மிக நீண்ட (236.22 செ.மீ) கூந்தலை உடையவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் உலகிலேயே மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதுடைய இந்த பெண் தன்னுடைய 14 வயதுக்கு பிறகு தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. இதன்மூலம் உலகின் மிக நீளமான கூந்தலை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
1980-களில் ஹிந்தி நடிகைகள் நீளமான முடி அலங்காரம் செய்திருப்பார்கள். அவர்களால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கியதாக கூறும் ஸ்மிதா, இப்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தன்னுடைய முத்திரையையும் பதித்துள்ளார்.
நீளமான கூந்தல் பெண்களின் அழகை மேம்படுத்துகிறது என்று கூறும் ஸ்மிதா, வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்வதை வழக்கமாக கொண்டிப்பதாக தெரிவித்தார். இதற்காக 30 - 40 நிமிடங்கள் ஆகுமாம். முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்