Volodymyr Zelenskyy: வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு அழைப்பு-பைடனுடன் நாளை முக்கிய ஆலோசனை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Volodymyr Zelenskyy: வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு அழைப்பு-பைடனுடன் நாளை முக்கிய ஆலோசனை

Volodymyr Zelenskyy: வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு அழைப்பு-பைடனுடன் நாளை முக்கிய ஆலோசனை

Manigandan K T HT Tamil
Dec 11, 2023 10:20 AM IST

உக்ரைனின் அதிபருக்கு டிசம்பர் 12ம் தேதி வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (AP Photo/Evan Vucci, File photo)
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (AP Photo/Evan Vucci, File photo) (AP)

ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், உக்ரைன் எதிர்கொள்ளும் "அவசர தேவைகள்" பற்றி இரு தலைவர்களும் விவாதிப்பார்கள். உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்காக காங்கிரஸுடன் (The United States Congress) வெள்ளை மாளிகை ஒப்பந்தம் செய்ய உள்ள நிலையில் இந்த சந்திப்பு வந்துள்ளது.

ஜெலன்ஸ்கி திங்களன்று வாஷிங்டனுக்கு வருவார் என்றும், "தொடர் சந்திப்புகள் மற்றும் விவாதங்கள்" இந்தப் பயணத்தில் அவருக்கு இருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர் பைடனைச் சந்திப்பார் என்று ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் கூறியது.

செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு EST (1400 GMT) கேபிட்டோலில் அமெரிக்க செனட்டர்களிடம் உரையாற்ற ஜெலென்ஸ்கியும் அழைக்கப்பட்டுள்ளார் என்று செனட் தலைமை உதவியாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு செவ்வாயன்று கேபிடோலில் நடைபெறும் என்று ஜான்சன் செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.

"ஜெலென்ஸ்கியின் வருகையின் போது அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய விவாதமாக இருக்கும், குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டுத் திட்டங்கள் மற்றும் வரும் ஆண்டில் நமது நாடுகளுக்கு இடையிலான முயற்சிகளை ஒருங்கிணைப்பது இருக்கும்" என்று ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.