Uttar Pradesh: தாய்க்காக ஏடிஎம் மெஷினை பொளந்த மகன்.. அதிர்ந்த கட்டுப்பாட்டு அறை.. காரணம் கேட்டு நெகிழ்ந்த போலீஸ்!
உத்திரபிரதேச மாநிலத்தில் தாயின் மருத்துவ செலவுக்காக ஏடிஎம் மெஷினை உடைத்த மகனை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஏடிஎம் மெஷினை உடைத்தவர் சுபம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சுபம் என்பவர் கடந்த சனிக்கிழமை காலை தோராயமாக காலை 3 மணி அளவில், ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மெஷினை உடைக்க செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்த வங்கி அதிகாரிகள் கான்பூர்காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் வந்திருக்கின்றனர். போலீசாரை பார்த்த சுபம், அங்கிருந்து தப்பிக்க முயன்று இருக்கிறார். ஆனால் போலீசார் அவரை பிடித்து விட்டனர்
இதனையடுத்து சுபத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தன்னுடைய தாய் கேன்சருக்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் யூடியூப் வீடியோக்களை பார்த்து ஏடிஎம் மெஷினை உடைத்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சுபம், தான் தற்போது கைது செய்யப்பட்டதில் தனக்கு வருத்தம் இல்லை என்றும் தன்னுடைய தாயின் சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் போனதே வருத்தத்தை தந்திருப்பதாகவும் கூறினார். சுபத்திற்கு எந்த ஒரு குற்றப்பின்னணியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்