Union Budget 2024 in Tamil Live Updates: வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கா?-union budget 2024 live updates finance minister nirmala sitharaman speech - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Union Budget 2024 In Tamil Live Updates: வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கா?

Union Budget 2024 in Tamil Live Updates: வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கா?

Manigandan K T HT Tamil
Feb 01, 2024 12:33 PM IST

Union Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட் குறித்து உடனுக்குடன் இந்தப் பக்கத்தில் அப்டேட்களை அறிந்து கொள்ளலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (HT)

 

வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா?

Union Budget 2024 in Tamil Live Updates: “வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

‘’பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது'' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Union Budget 2024 in Tamil Live Updates: ‘’ஜி.எஸ்.டி மூலமாக ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. அனைத்து உட்கட்டமைப்புகளும் வரலாறு காணாத வேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.''என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

 

"கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்வு" 

Union Budget 2024 in Tamil Live Updates: "கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்வு" என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

'புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்'

Union Budget 2024 in Tamil Live Updates: ''நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

'வளர்ச்சியடைந்த இந்தியா'

Union Budget 2024 Live Updates: "வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

பெண்களுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை

Union Budget 2024 Live Updates: பெண்களுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

'வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்'

Union Budget 2024 Live Updates: வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம் செல்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

43 கோடி முறை வங்கிக் கடன்கள்

 

Union Budget 2024 Live Updates: முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

‘2047-இல் புதிய இந்தியா’

 

Union Budget 2024 Live Updates: 2047-இல் புதிய இந்தியாவை படைப்போம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

பட்ஜெட் நிகழ்வு தொடங்கியது

 

Union Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.

 

மத்திய பட்ஜெட் நேரலை விவரம்

Union Budget 2024 Live Updates: பார்லிமென்ட் சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷன் இந்த செஷனை டிவி மற்றும் அவற்றின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் நேரடியாக நேரலையில் ஒளிபரப்பும். யூனியன் பட்ஜெட் இணைய போர்டல் வழியாக ஒருவர் புதுப்பிப்புகளையும் அணுகல் ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் பார்க்கலாம்: http://www.indiabudget.gov.in, ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கும்.

 

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்

Union Budget 2024 Live Updates: பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் நேரடி ஒளிபரப்பை டிடி நியூஸில் காணலாம். பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் வலைத்தளம் மூலம் பட்ஜெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும்.

6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்

Budget 2024 Speech Live Streaming: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் 2024 தேதி மற்றும் நேரம்?

Finance Minister Nirmala Sitharaman: பட்ஜெட் 2024 காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும். முன்னதாக, இது பிப்ரவரி கடைசி வேலை நாளில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது, ஆனால் பிரதமர் மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் இது மாற்றப்பட்டது.

 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.