Russia Ukraine war: ரஷ்யாவை இணைக்கும் முக்கிய பாலத்தைத் தகர்த்த உக்ரைன்!
ரஷ்யா உடன் இணைக்கும் கிரீமிய தீபகற்பத்தில் உள்ள முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது.

<p>கிரீமிய பாலம்</p>
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் நான்கு நகரங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரமான கிரீமிய கீவில் நேற்று சரமாரியாகக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பல்வேறு மருத்துவ கட்டடங்கள், மனித கட்டடங்கள் பெரும் சேதமாகின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா உடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது. தற்போது தற்காலிகமாக அந்த பாலத்தில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலத்தின் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.