UG Application : புதுச்சேரி மாணவர்களே! இளங்கலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! மற்றுமொரு குட் நியூஸ் உள்ளே!
புதுச்சேரி மாநிலத்தில் நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக்., பிஎஸ்.சி., வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல், வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்கலைப்படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே பொறியியல், நர்சிங் மற்றும் கலை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி (இன்று) வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் தொழில் படிப்பில் சேர விருப்பமுள்ள பொதுப் பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டியல் இன மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கலை அறிவியல் மற்றும் வணிக படிப்பில் சேர உள்ள பொது பிரிவினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 300 ரூபாயும், பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் நர்சிங் பாட பிரிவுகளுக்கு 12ம் வகுப்பில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்
கடுமையான வெயிலின் தாக்கத்தால் சிறுவர்கள், வயதானவர்கள் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் ஏற்கனவே 7ம் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தொடரும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் நலன்கருதி புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7க்கு பதில் ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரி மாநில பள்ளிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்