Kerala: ஐயோ..! மறந்துட்டேனே - 1 கி.மீ பின்னால் வந்த ரயில்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala: ஐயோ..! மறந்துட்டேனே - 1 கி.மீ பின்னால் வந்த ரயில்

Kerala: ஐயோ..! மறந்துட்டேனே - 1 கி.மீ பின்னால் வந்த ரயில்

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2023 10:44 AM IST

கேரளாவில் 1 கிலோமீட்டர் பின்னால் வந்து ரயில் நிலையத்தில் பயணிகளை ரயில் ஒன்று ஏற்றிச் சென்றுள்ளது.

ரயில்
ரயில்

வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சோரனூரை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது காலை 7.45 மணி அளவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செரிய நாடு என்ற ஒரு சிறிய ரயில் நிலையத்தை நோக்கி அந்த ரயில் வந்துள்ளது.

ஆனால் அந்த ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விட்டது. அந்த ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயில் ஒரு கிலோ மீட்டரை தாண்டிய பிறகு அதன் ஓட்டுநர் தனது தவறை உணர்ந்துள்ளார்.

அதற்குப் பிறகு ரயிலை நிறுத்திய ஓட்டுநர் ரிவர்சில் ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து அந்த பயணிகளை ஏற்றிச் சென்றார். ஒரு சிறிய குழப்பத்தால் ஏற்பட்ட நேரம் இழப்பை ரயிலை விரைவாக ஓட்டி அந்த ஓட்டுநர் நேரத்தைச் சரி கட்டி விட்டார்.

செல்ல வேண்டிய நேரத்தில் சேரனூர் ரயில் நிலையத்திற்குச் சரியாகச் சென்று விட்டது. மீண்டும் வந்து பயணிகளை ரயில் அழைத்துச் சென்ற காரணத்தினால் இது குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இருந்த போதும் இதுகுறித்து எஞ்சின் ஓட்டுநரிடம் ரயில்வே அலுவலர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

பெரிய ரயில் நிலையங்களில் சிக்னல் இருக்கும். சிறிய ரயில் நிலையங்களில் சிக்னல் இல்லாத காரணத்தினால், அதுவும் இந்த ரயில் நிலையத்தில் சிக்னல் இல்லை அதன் காரணமாக என்ஜின் டிரைவர் கவனக்குறைவாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ரயிலை சுமார் 700 மீட்டர் வரை எஞ்சின் ஓட்டுநர் பின்னோக்கி இயக்கி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட எட்டு நிமிட நேர இழையில் போய் எஞ்சின் ஓட்டுநர் சரி செய்து விட்டார்.

இது போன்ற சம்பவங்கள் நடப்பது என்பது அதிசயம் தான். முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் கிரேட் செயல் இழந்த காரணத்தினால் ஜனசதாப்தி ரயிலை எஞ்சின் ஓட்டுநரால் நிறுத்த முடியவில்லை.

பிறகு கஷ்டப்பட்டு ரயிலை நிறுத்திய என்ஜின் ஓட்டுநர், 20 கிலோமீட்டர் பின்னோக்கி ரயிலை ஒட்டி வந்து ரயில் நிலையத்தில் நிறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.