Top 10 News (01.05.2023): மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்-திமுக ஆதரவு, உதகையில் 4 விடுதிகளுக்கு சீல்.. மேலும் செய்திகள்
Today Top 10 News: தமிழ்நாடு, இந்தியா, உலகம், பொழுதுபோக்கில் இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்தச் செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
தமிழ்நாடு
* உதகை பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 4 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குடியிருப்புக்கான அனுமதி பெற்றுவிட்டு, சொகுசு விடுதிகளாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டது விசாரணையில் தெரியவந்தது.
*டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
*பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
* இலங்கை, குவைத், அபுதாபி நாடுகளிலிருந்து 3 விமானங்களில், சென்னைக்கு கடத்திவரப்பட்ட ₹1.34 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் பயணி உட்பட 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தியா
*பிரதமர் மோடியின் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100 எபிசோட்களுக்கு ரூ.830 கோடியை அரசு செலவிட்டுள்ளது என ட்வீட் செய்த குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
*மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
பொழுதுப்போக்கு
*சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் உள்ளிடோர் நடித்த ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
*மும்பையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசைக் கச்சேரியில் திடீரென்று காவல்துறையினர் புகுந்து நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
*நடிகர் அஜித்தின் பிறந்த நாளையொட்டி, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
*தமிழ் திரைப்பட சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவராக தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார்.
விளையாட்டு
*லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே 43வது லீக் ஆட்டம் இன்று (மே 1) நடக்கவுள்ளது.
*ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் விக்கெட் கீப்பரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வருத்தம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்