தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Today Is The First Day That The Barbie Doll Went On Sale

Barbie Doll: 'குழந்தைகளின் எவர் கிரீன் கிரஷ் பார்பி பொம்மை' சந்தைக்கு வந்த நாள் இன்று.. பார்பியின் வரலாறு தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2024 06:00 AM IST

Barbie Doll History: குழந்தைகள் தங்களை எப்படி அலங்காரம் செய்து கொள்ள விரும்புகின்றனரோ அப்படி எல்லா வகையிலும் தனது பார்பி பொம்மைக்கு அலங்காரம் செய்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இந்த பார்பி பொம்மை வந்த காரணம் , அதன் வரலாறு, முதல் முதலில் விற்பனைக்கு வந்த தினம் குறித்து இங்கு பார்க்கலாம்.

பார்பி பொம்மை தோன்றிய கதை!
பார்பி பொம்மை தோன்றிய கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகள் தங்களை எப்படி அலங்காரம் செய்து கொள்ள விரும்புகின்றனரோ அப்படி எல்லா வகையிலும் தனது பார்பி பொம்மைக்கு அலங்காரம் செய்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இந்த பார்பி பொம்மை வந்த காரணம் , அதன் வரலாறு, முதல் முதலில் விற்பனைக்கு வந்த தினம் குறித்து இங்கு பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த மேட்டெல் என்ற பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனர்களில் ஒருவர் ரூத் ஹாண்டலர் என்ற பெண். இந்த நிறுவனம் அதுவரை டெடிபியர்கள், சின்ன சின்ன பொம்மைகள் தயாரிக்கப்பட்டு மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சமயத்தில் தான் ரூத் ஹாண்ட்லர் தனது மகள் பார்பரா காகிதத்தால் ஒரு பொம்மையை செய்து தன்னேயே அந்த பொம்மையாக கற்பனையில் யோசித்து தான் எதிர்காலத்தில் என்னவாக ஆகுவேன் என்று தனது விருப்பத்தை தெரிவிக்கும் விதமாக விளையாடிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ரூத் ஹாண்ட்லர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தன் குழந்தை மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த சில கற்பனைகள் இருக்கும். அந்த கற்பனைக்கு செறிவூட்ட இந்த மாதிரி பொம்மைகள் அவசியம் அவர்களுக்கு உதவியாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார்.

இதை தனது கணவர் எலியட்டிடம் கூறினார். அவர்தான் மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். ஆனல் ஹாண்ட்லரின் கணவர் அந்த யோசனையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மேட்டல் நிறுவனத்தின் மற்ற இயக்குநர்களும் அப்படியே இருந்தனர்.

1956வது வருடம் தம் குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்றபோது, ருத் ஹாண்ட்லர் பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் பொம்மையை தற்செயலாக பார்த்தார். அதன் வளர்ந்த மனித உருவம் கொண்டிருந்த அந்த பொம்மைதான் ஹாண்ட்லரின் மனதில் இருந்த வடிவம் ஆகும். அவர் அந்த பொம்மைகளில் மூன்றை வாங்கினார். தன் மகளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை மேட்டலுக்குக் எடுத்துச் சென்றார். சித்திரப் புத்தகம் ஒன்றில் வரும் பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்னும் செய்தித்தாளுக்காக ரெய்ன்ஹார்ட் ப்யூடின் என்பவர் வரைந்ததாகும். லில்லி வேலைக்குச் செல்லும் ஒரு பெண். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவள் அறிவாள். அதை அடைவதற்கு அவள் ஆண்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. 1955ம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனையானது. முதலில் பெரியவர்களுக்காக அது விற்கப்பட்டாலும், பிறகு அது குழந்தைகளிடம் மிக வேகமாக பிரபலமாகிவிட்டது. அவர்கள் அதற்கென்றே தனியாகக் கிடைக்கும் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள்.

ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்ப வந்தவுடன், (ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை மீண்டும் வடிவமைத்து அதற்கு பார்பி என்ற ஒரு புதிய பெயரைச் சூட்டினார். இந்தப் பெயர் அவரது மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. 1959வது வருடம் மார்ச் 9ம் தேதி நியூயார்க் நகரில், அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக வெளியானது. இந்த தேதி தான் பார்பியின் அதிகாரப் பூர்வமான பிறந்த நாள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து பில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் நிறுவனம் 1964ம் வருடம் வாங்கியது. இதனால் லில்லி பொம்மைகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

முதன் முதலாக வந்த பார்பி பொம்மை கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை நீச்சல் உடை மற்றும், அதன் பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில் முடியப்பட்ட ஒரு போனி டெயில் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது ஒரு பிளாண்ட் அல்லது ப்ருநெட் வடிவங்களில் கிடைக்கப்பெற்றது. "பதின் வயது நவ நாகரிக மாடல்" என்ற பெயரில் இந்த பொம்மை வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்திருந்தார். இதையடுத்து பார்பியின் ஆண் நண்பன் தங்கை , பெற்றோர், கார் என ஒரு பார்பி உலகமே படிப்படியாக வடிவமைக்கப்பட்டு விற்பனையில் சக்கை போடு போடத்தொடங்கியது.

சர்ச்சைகள்

பார்பி பெம்மையை பொருத்தவரை அடைய முடியாத உடல் பிம்பத்தை இளம் பெண்களின் மனத்தில் புகுத்துகிறது. இதன் காரணமாக, பார்பியைப் பின்பற்றி அதைப் போல உடல் பெற விரும்பும் பெண்கள் அனோரெக்ஸிக் என்னும் நோய்க்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது என்பது போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது.

எது எப்படி இருந்தாலும் வணிக ரீதியாக பார்பி விற்பனை அரை நூற்றாண்டை கடந்து வெற்றிகரமாக நடைபெறகிறது என்பதே உண்மை

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்