INDIA bloc meeting: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்? பின்னணி காரணம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India Bloc Meeting: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்? பின்னணி காரணம்

INDIA bloc meeting: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்? பின்னணி காரணம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 28, 2024 11:21 AM IST

இந்தியா கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், நாடளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு வர முடியாது என்று அறிவித்துள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள ஒரு கணிசமான பிரிவு இப்போது தேதியை மாற்ற விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

வியூகம் வகுக்க கூட்டம்

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதில் கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் மீதமிருக்கும் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய வியூகங்களை வகுக்க தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

அதன்படி பாஜகவை எதிர்க்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு

மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மற்றும் ரெமல் புயலுக்குப் பிறகு நிவாரணப் பணிகள் காரணமாக ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.

தேதி மாற வாய்ப்பு

கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வர இயலாது என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் கணிசமான பிரிவினர் ஆலோசனை கூட்டத்தின் தேதியை மாற்ற விருப்பம் தெரிவித்திருப்பதாக உயர்மட்ட காங்கிரஸ் தலைவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். எனவே ஆலோசனை கூட்டம் தொடர்பாக தேதி மாற்றம் விரைவில் வெளியாகலாம்.

26 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் இரண்டு மூத்த தலைவர்களின் கூற்றுப்படி, ஜூன் 1இல் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு வெளிவரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த வியூகத்தை உருவாக்க இந்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி கேள்வி

தேர்தல் பிரசாரத்தின்போது, நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர் என்று அழைப்பதற்கு பதிலாக பிரதமர் என்று கூற வேண்டும் என எழுந்துள்ள கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"மோடிக்கு பிரச்சாரம் செய்யவும், இங்கு வந்து தேர்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் அவரது கட்சியின் பிரச்சார விளம்பரங்களில் அவர் பிரதமர் என்று குறிப்பிடப்படுவதை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

அவர் இதை செய்யலாமா? நான் எனது பிரச்சாரத்தில் திரணாமுல் காங்கிரஸ் தலைவர் என்றே அழைக்குமாறு வலியுறுத்துகிறேன். ஏனென்றால் நான் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கிறேன்" என்று கொல்கத்தா உத்தரத் தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய போது மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மோடியின் ரோட் ஷோ கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் நிலையில், மம்தா முகர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.