Noble prize chemistry: வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்து அளிப்பு
இந்த ஆண்டு வேதியலுக்கு நோபல் பரிசு ஒரு பெண், இரண்டு ஆண் விஞ்ஞானிகள் என மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி, பேரி ஷார்ப்லெஸ் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புற்று நோய் பாதிப்புக்கான சிகிச்சைக்கு உதவும் Click chemistry, Bioorthogonal chemistry குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோலின் பெர்ட்டோசி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியாகவும், ஸ்கிரிப்ஸ் ஆய்வுகள் நிறுவனத்தை சேர்ந்தவராக பேரி ஷார்ப்லெஸ், மார்ட்டன் மெல்டல் டென்மார்க்கின் கோபன்ஹகென் பல்கலைகழகத்தை சேர்ந்தவராகவும் உள்ளார்கள்.
முன்னதாக, ஃபிரான்சின் அலைன் ஆஸ்பெக்ட் அமெரிக்காவின் ஜூன் எஃப் கினாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் ஸிலிங்கள் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட வரும் வெள்ளிக்கிழமை இருக்கிறது. இந்த பட்டியலில், Altnews இணையதளத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்கா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு இந்தாண்டு இந்தியர்களுக்கு வழங்கப்படுமா என்ற லட்சோப லட்ச மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.