Theft: ஏன் திருடினேன்? - கடிதம் எழுதி வைத்து சரண்டரான பலே திருடன்
ராஜஸ்தானில் பேக்கரியில் திருடிய திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டு திருடி சென்ற சம்பவர் அரங்கேறி உள்ளது.
பொதுவாக திருடர்கள் என்றால் திருடிவிட்டு தப்பி சென்றுவிடுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் திருடும் வீட்டில் சாப்பிடுவது, எதனால் திருடிகிறோம் என்பதை கடிதமாக எழுதிவிட்டு செல்கின்றனர்.
இதே போன்ற சம்பவம் தான் தற்போது வடமாநிலத்திலும் அரங்கேறி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் வசித்து வருபவர் கோமாராம். இவர் அதே ஊரில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி காலை கோமாராம் வழக்கம் போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கடை கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
வேறு எந்த பொருளாவது திருடப்பட்டு இருக்கிறதா என உரிமையாளர் தேடினர். அப்போது அங்கு ஒரு கடிதம் கிடந்து உள்ளது.
அதை திறந்து பார்த்த போது, கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ”சார் எனக்கு நல்ல மனசு இருக்கிறது. நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்ற தான் வந்தேன்.
நான் சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகிறது. ஒரே பசியாக இருந்தது, உங்கள் கடைக்கு சாப்பிட தான் வந்தேன். பணம் திருடவதற்கு நான் வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் காலில் அடிபட்டு இருக்கிறது, அதற்கு பணம் தேவைப்படுகிறது.
எனவே, உங்கள் கல்லாவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் கடையில் அதிகமாக ஒன்றும் சாப்பிடவில்லை. நான்கு பீஸ் இனிப்புகளை தான் சாப்பிட்டேன். கடைசியாக ஒன்று சொல்கிறேன். நீங்கள் இதை காவலர்களின் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் நான் உங்கள் விருந்தாளி" என குறிப்பிட்டு உள்ளார்..
இந்த சம்பவம் அறிந்து காவல் துறையினர் விரைந்து சென்றனர். ஆனால் கடையின் உரிமையாளர் கோமாராம் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் காவலர்கள் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்