Techie Suicide: வலி இல்லாமல் இறக்க நைட்ரோஜன் கேஸ் சுவாசித்து ஐடி ஊழியர் தற்கொலை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Techie Suicide: வலி இல்லாமல் இறக்க நைட்ரோஜன் கேஸ் சுவாசித்து ஐடி ஊழியர் தற்கொலை

Techie Suicide: வலி இல்லாமல் இறக்க நைட்ரோஜன் கேஸ் சுவாசித்து ஐடி ஊழியர் தற்கொலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 23, 2022 10:54 AM IST

உடல் நல பாதிப்புக்காக சிகிச்சை எடுத்தும் குணமடையாததால் மனமுடைந்த சாப்ட்வேர் இன்ஜினியர், வலி இல்லாமல் இறந்துபோவதற்காக நைட்ரோஜன் கேஸை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நல பாதிப்பு குணமடையாததால் நைட்ரோஜன் கேஸ் சுவாசித்து சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை
உடல் நல பாதிப்பு குணமடையாததால் நைட்ரோஜன் கேஸ் சுவாசித்து சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை (HT_PRINT)

இதய பிரச்னை பாதிப்புக்குள்ளான விஜயகுமாருக்கு மூச்சு விடுவதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் எந்த பலனும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தற்கொலை செய்துகொள்வதென முடிவு செய்த விஜயகுமார் வலி இல்லாமல் இறப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களில் கூகுளில் தேடியுள்ளார். அதில், பூட்டப்பட்ட அறைக்குள் முக்கத்தை மூடி, பைப் மூலமாக நைட்ரஜன் கேஸ் செலுத்தினால் வலி இல்லாமல் இறந்துவிடலாம் என்ற தகவலை பார்த்துள்ளார்.

பின்னர் இதை பின்பற்றி தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்துள்ளார் விஜயகுமார். கடந்த இரு நாள்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பியபோது குருபரஹள்ளி பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார். பின் தனது கார் கண்ணாடிகளை மூடிவிட்டு, கையில் வைத்திருந்த நைட்ரோஜன் சிலிண்டரை திறந்த அந்த பைப்லைனை தனது வாயில் வைத்து முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூச்சு விட முடியாதவாறு மூடியுள்ளார்.

இதையடுத்து நைட்ரோஜன் கேஸ் அதிக அளவில் உடலுக்கு சென்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன் மனைவியிடம் உருக்கமாக பேசியுள்ளார் விஜயகுமார். அப்போது அவரது மனைவி வீட்டுக் வருமாறும், பேசி நல்ல தீர்வை காணலாம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் வீட்டுக்கு செல்லாமேலேயே சாலையில் வைத்தே விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.