TCS Hiring: டாப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10 ஆயிரம் புதியவர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ் நிறுவனம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tcs Hiring: டாப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10 ஆயிரம் புதியவர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ் நிறுவனம்

TCS Hiring: டாப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10 ஆயிரம் புதியவர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ் நிறுவனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 05:03 PM IST

நிறுவனம் கடந்த மாத்தில் தேசிய தகுதி சோதனை (NQT) மூலம் புதிய பணியமர்த்தலைத் தொடங்கியதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 என தெரிவிக்கப்பட்டது.

புதியவர்கள் வேலைக்கு எடுக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ்
புதியவர்கள் வேலைக்கு எடுக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ்

தேசிய தகுதிச் சோதனை (NQT) மூலம் புதியவர்களை பணியமர்த்தத் தொடங்கியதாக நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 எனவும் தெரிவித்திருந்தது.

ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த பணிக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மூன்று பிரிவுகளுக்கு பணியமர்த்தலுக்காக நடைபெறுகிறது. அதன் நிஞ்ஜா பிரிவில் பல்வேறு பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ .3.36 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், டிஜிட்டல் மற்றும் பிரைம் பிரிவுகளில் முறையே ரூ .7 லட்டம் மற்றும் ரூ .9 முதல் 11.5 லட்சம் ஆண்டு சம்பளம் வழங்கப்படவுள்ளது.

டிசிஎஸ் பணியமர்த்தல் பற்றி கல்லூரிகள் சொன்னது என்ன?

டிஜிட்டல் மற்றும் பிரைம் சுயவிவரங்களை கொண்டிருக்கும் மாணவர்கள் டெவலப்மெண்ட் பணிகளுக்கும், நிஞ்ஜா சுயவிவரங்களில் உள்ளவர்கள் டெவலப்மெண்ட் தொடர்பான ஆதரவு பணிகளிலும் அமர்த்தப்படுவார்கள் என்று கல்லூரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எனது பார்வையில் இது தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக உள்ளது. நிச்சயமாக அனைத்து கல்லூரிகளிலிருந்தும் திறமை மிக்க மாணவர்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கணிசமான அளவில் மாணவர்கள் வேலையை பெறுவார்கள் என்று நினைக்கிறேன், அதைத்தான் கல்லூரிகளும் எதிர்பார்க்கின்றன" என்று டிசிஎஸ் பணியமர்த்தல் குறித்து வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் வி சாமுவேல் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

விஐடி மாணவர்களில் மொத்தம் 963 வேலை உறுதியானதற்கான தகவல் கிடைத்துள்ளன. அவற்றில் 103 பேர் ப்ரைம் பிரிவில் வேலை செய்ய இருக்கிறார்கள்.

முன்னதாக, டிசிஎஸ் 2024 நிதியாண்டில் 40 ஆயிரம் பிரஷ்ஷர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 22,600 ஊழியர்களைச் சேர்த்தது.

புத்துயிர் பெறும் ஐடி துறை

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பின்னர் ஐடி துறை கடுமையான வீழ்ச்சியை கண்டன. இதன் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது ஐடி வேலைகளை இழக்கும் சூழல் உருவானது.

கொரோனாவுக்கு பின் 2022-23 நிதியாண்டு வரை ஐடி துறையில் புதிய ஆட்சேர்ப்பை காட்டிலும் பணி நீக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. கடந்த நிதியாண்டில் இது ஓரளவுக்கு பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, புதிய ஊழியர்களை சேர்க்கும் பணியும் பிரபல நிறுவனங்கள் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2024 -25 நிதியாண்டில் ஐடி துறை மீண்டும் புதிய வளர்ச்சியை பெறும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு ஆயுத்தமாகும் விதமாக முன்னணி நிறுவனங்கள் பல திறமையானவர்களை பணியமர்த்தும் வேலையை தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த டாப் ஐடி நிறுவனமான டாடா கன்டல்டன்சி சர்வீஸ் தற்போது நல்ல சம்பளத்துடன் ஆட்களை சேர்க்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.