Amethi Election Results: அமேதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் ஸ்மிருதி இரானி தோல்வி.. அகிலேஷ், ராஜ்நாத் சிங் முன்னிலை
Smriti Irani: உத்தரப் பிரதேசத்தில் 'இந்தியா' கூட்டணி 43 இடங்களிலும், பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மோடி, ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

Amethi Election Results: பாஜகவுக்கு பின்னடைவு: காங்கிரஸ் வேட்பாளரிடம் ஸ்மிருதி இரானி தோல்வி(PTI Photo/Arun Sharma) (PTI)
Lok Sabha Election 2024: உத்தரபிரதேசத்தின் பாரம்பரிய காந்தி குடும்பத்தின் கோட்டையான அமேதியில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்துள்ளார்.
காந்தி குடும்பத்தின் விசுவாசியான காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா 50,758 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.