Skoda Enyaq iV vRS EV: புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியிட்ட ஸ்கோடா!
ஸ்கோடா நிறுவனம் புதிய Enyag iV vRS என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Skoda Enyaq iV vRS electric SUV
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் தேவையானது அதிகரித்துவிட்டன. அதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒரு காரணமாகும். எலக்ட்ரிக் கார்களின் தேவை அதிகரித்து விட்டதால் முன்னணி மோட்டார் நிறுவனங்களும் தற்போது கார் தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஸ்கோடா நிறுவனம் அந்த வரிசையில் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காருக்கு Enyag iV vRS என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் கொண்டதாகும்.
இதில் 82 kWh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 6.5 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து விடும். இந்த கார் அதிகபட்சமாக 278 கிலோமீட்டர் வேகம் செல்லும். இது 296 Bhp பவர் கொண்ட காராகும்.