Singapore Insects foods: பூச்சிகளைச் சாப்பிட அனுமதி கேட்கும் சிங்கப்பூர்!
மனிதர்கள் பூச்சிகளை உணவாக உட்கொள்ளவும் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பது குறித்தும் சிங்கப்பூர் அரசு, உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் கருத்து கூறியுள்ளது.
மனிதர்கள் பூச்சிகளை உணவாக உண்பதற்கும் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதற்கும் அனுமதி அளிப்பது குறித்து உணவு மற்றும் கால்நடை தீவன தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்துக் கேட்டுள்ளது.
இவ்வாறு இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தேனீக்கள், அந்துப் பூச்சிகள் போன்ற இனங்களைச் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் உணவாகச் சாப்பிட முடியும். அதேசமயம் இந்த பூச்சிகளை நேரடியாகவோ, எண்ணெய்யில் பொறித்தோ சாப்பிட முடியும் என அந்நாட்டின் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பூச்சிகளை உணவாகச் சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து சிங்கப்பூர் உணவுத்துறை கருத்துக்களைப் பெற்று வருகிறது.
மேலும் அறிவியல் பூர்வ ஆய்வு முழுமையான பிறகு மேல் கூறப்பட்டுள்ள சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் எனச் சிங்கப்பூர் நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீப காலத்தில் மனிதர்கள் உணவாகப் பூச்சிகளை உட்கொள்வதற்காகவும் கால்நடைகளுக்கு தீவனமாகப் பூச்சிகளைக் கொடுப்பதற்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்த ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஊக்குவித்து வருகிறது.