தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sikkim : வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம்.. அக்டோபர் 15 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

Sikkim : வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம்.. அக்டோபர் 15 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

Divya Sekar HT Tamil
Oct 06, 2023 12:48 PM IST

சீரற்ற வானிலை காரணமாக சிக்கிமில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்டோபர் 15 வரை மூடப்படும் என்று மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம்
வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம்

ட்ரெண்டிங் செய்திகள்

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா நதிப் படுகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணாமல் போயுள்ள நிலையில் இதுவரை 14 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக சிக்கிமில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்டோபர் 15 வரை மூடப்படும் என்று மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தீஸ்தா நதிப் படுகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, சிக்கிமில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடுமாறு முதல்வர் பிரேம் சிங் தமாங் உத்தரவிட்ட சில மணிநேரங்களில் சுற்றறிக்கை வந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்