Ukraine War: துண்டு துண்டாகச் சிதறிய பொதுமக்கள் - அடுத்தடுத்து பாயும் ஏவுகணைகள்
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் பல மாதங்களாக நடந்து வருகின்றது. இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் இடையே தாக்குதலின் தீவிரம் இன்று வரை குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தாக்குதலானது உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.
அந்த வகையில் உக்ரையின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி தீவிரமாக உச்சக்கட்ட தாக்குதல் நடவடிக்கையை நடத்தி வருகின்றது. அதே சமயம் சில முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ரஷ்யா ராணுவம் அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. ராணுவ பகுதிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் கடுமையான தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் செய்து வருகிறது.
இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை பெரிய அளவில் முன்னேற்றம் அடையாத காரணத்தினால் ஒரு ஆண்டை கடந்தும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது உக்ரைன் தகுந்த பதிலடி கொடுத்தாலும் ரஷ்யாவின் தாக்குதல் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மத்திய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நேற்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி மிகப்பெரிய தாக்குதல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் போது 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், இரண்டு ட்ரோன்களையும் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் உமான் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடக் குடியிருப்புகள் தகர்த்தெறியப்பட்டன. இதிலிருந்து 17 பேர் உயிரிழந்ததாக அந்த பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்துள்ளார். வேறொரு பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் இடுப்பாடுகளில் சிக்கி 17 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அது சிக்கி இருந்த மூன்று குழந்தைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கீவ் மீது முதல்முறையாக ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட இது இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்