தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ukraine: உக்ரைன் அதிபர் ஊரில் தாக்குதல் - அதிகரித்து வரும் பலி..!

Ukraine: உக்ரைன் அதிபர் ஊரில் தாக்குதல் - அதிகரித்து வரும் பலி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2023 06:37 PM IST

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இன்று அதிகாலை உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா அரசு ஏவுகணை தாக்குதலையும் நடத்தியுள்ளது. உக்ரைனில் மையப் பகுதியில் இருக்கக்கூடிய கிருவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதலானது.

இதுவரை இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது 5 மாடிக் கட்டிடத்தைத் தாக்கியுள்ளது. அதற்குப் பிறகு அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தற்போது அந்த ஈடுபாடுகளில் பொதுமக்கள் சிக்கி உள்ளதாகவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து பல்வேறு நாடுகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் பல உயிர்கள் பலியாகி உள்ளன.

இதுகுறித்து பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தாலும், போர் நிற்காமல் நடந்து வருகின்றன. 16 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில், இந்த முறை ஏவுகணை மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பு தாக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதி பகுதி தாக்கப்பட்ட படங்களை ஜெலன்சி வெளியிட்டுள்ளார். மேலும் இது பயங்கரவாத ஏவுகணைகள், ரஷ்ய நாட்டின் கொலைகாரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராகப் போரைத் தொடர்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களை ரஷ்ய ஏவுகணைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. பல்வேறு ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துள்ளதாக கிவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்