Ukraine drone attack on Russia: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் மேயர் அதிர்ச்சி தகவல்
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்று முன் ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோ நகரம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் ட்ரோன்கள் இரண்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் இதில் அடுக்கு மாடி கட்டிடம் சேதம் அடைந்துள்ளது என மாஸ்கோ மேயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதற்றமான சூழலில் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த விமான நிலையத்திற்கு வருவதாக விமானங்கள் வேறு பகுதிக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்