Robot Rickshaw: இந்தியாவை கலக்குமா இந்த ரோபோ ரிக்ஷா!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Robot Rickshaw: இந்தியாவை கலக்குமா இந்த ரோபோ ரிக்ஷா!

Robot Rickshaw: இந்தியாவை கலக்குமா இந்த ரோபோ ரிக்ஷா!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 16, 2023 10:48 AM IST

ரோபோ ரிக்ஷாவின் பணி கூட இன்னும் முழுமை அடைய வில்லை. தெருவில் இந்த ரோபோவை ஓட்டி சோதனை செய்தோம்

ரோபோட் ரிக்ஷா
ரோபோட் ரிக்ஷா

மனிதர்களை போல சிந்திக்கும் திறன் கொண்ட ரோபோக்களை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே முயற்சியில் சூரத் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த சூரத் மாணவர்கள், தற்போது ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்து உள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகை ரோபோக்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ரேபோ ரிக்ஷாவை வடிவமைக்க மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாகங்கள் மற்றும் இயந்திரங்களை பெற்றுள்ளனர். சில உதிரி பாகங்கள் சூரத்தில் கிடைத்தது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்கள் போலவே புரிந்து கொண்டு செயல்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் ஈடுபட்ட பி.டெக் மாணவரான சிவம் மவுரியா கூறுகையில் கடந்த5 வருடமாக இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றோம். நான் 10ம் ஆண்டு படிக்கும் போதிருந்ததே இதில் பணியாற்றி வருகிறேன். இது எங்களின் முதல் ரோபோ இல்லை. பல நோக்கங்களுக்காக ரோபோக்களை வடிவமைத்துள்ளோம். இந்த ரோபோ ரிக்ஷாவின் பணி கூட இன்னும் முழுமை அடைய வில்லை. தெருவில் இந்த ரோபோவை ஓட்டி சோதனை செய்தோம். அப்போது எடுத்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் இந்த ரிக்ஷா ரோபோவில் முடிக்க பல வேலைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த ரோபோவை திட்டமிட்டு வடிவமைக்க எங்களுக்கு 25 நாட்கள் வரை பிடித்தது. ஒரு மனித உடலின் இயக்கங்களை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ரோபோவின் கால்களை வடிவமைத்தோம். அதனால் தான் இந்த ரோபோ மனிதர்களை போல் நடப்பதை உங்களால் பார்க்க முடியும். இனி வரும் காலங்களில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ட்ஸ் அடிப்படையில் இந்த ரோபா செயல்படும். நாம் சொல்வதை புரிந்து கொண்டு ரோபோ செயல்படும்.உதாரணமான ரூம் நம்பர் 30 ல் பொருட்களை கொடுக்க சொன்னால் ரோபோ செய்யும். மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தங்கள் மூலம் இந்த ரோபோவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரோபோவில் மேப்பிங் இணைக்கப்பட்டுள்ளது என குழுவினர் தெரிவித்துள்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.