தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Paytm: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!

Paytm: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!

Marimuthu M HT Tamil
Feb 16, 2024 07:35 PM IST

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு! (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31ஆம் தேதி, பிப்ரவரி 29க்குப் பிறகு, எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், பணப்பைகள், ஃபாஸ்டேக்குகள் மற்றும் தேசிய பொது இயக்கம் அட்டைகளில் மேலும் வைப்புத்தொகை, கடன் பரிவர்த்தனைகளுக்கு,பேடிஎம் பேமென்ட்ஸ்ஸை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டது. 

மேலும், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என பேடிஎம் பெமென்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்தனர். இதில் பெரும்பாலானோர் வணிகர்கள்.

பேடிஎம் பேமென்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மார்ச் 15, 2024 வரை ரிசர்வ் வங்கி, பேடிஎம் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் அளித்தது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கூறும்போது, ‘’வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல், தானியங்கி 'பரிவர்த்தனையைச் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனையைப் பெறுதல்' வசதியின்கீழ் கூட்டாளர் வங்கிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, வாடிக்கையாளர் வைப்புகளை திரும்பப் பெற வங்கி உதவும்’’ என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பேடிஎம் மீதான தொடர் புகார்கள் மற்றும் தொடர்ச்சியான மேற்பார்வை புகார்கள் குறைபாடுகள் காரணமாக, பேடிஎம் பெமென்ட்ஸ் வங்கி மீது மத்திய ரிசர்வ் வங்கி இந்த தடை நடவடிக்கையினை எடுத்துள்ளது. மேலும் இந்த தடை செயல்பாட்டை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது.

ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலையும் வெளியிட்டது.

அதில் வணிகர்கள் உட்பட வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர் கணக்குகள், பணப்பைகள் மற்றும் ஃபாஸ்டேக்குகளில் இருக்கும் வைப்புத்தொகை, கடன் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் பாதிக்காமல் இருக்க, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட்-க்கு மார்ச் 15, 2024 வரை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வரை மேலும் 15 நாட்கள் அவகாசம் அளித்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்