Rani of Jhansi : ஆங்கிலேயருடன் அசராது போர் புரிந்த வீர பெண்மணி ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rani Of Jhansi : ஆங்கிலேயருடன் அசராது போர் புரிந்த வீர பெண்மணி ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம்

Rani of Jhansi : ஆங்கிலேயருடன் அசராது போர் புரிந்த வீர பெண்மணி ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம்

Priyadarshini R HT Tamil
Jun 18, 2023 05:45 AM IST

Rani of Jhansi : 14வது வயதில் ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவரை 1842ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைப்பதுடன், ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.

ஜான்சி ராணி லட்சுமி பாய்
ஜான்சி ராணி லட்சுமி பாய்

இவரது 4 வயதில் தாய் பகீரதிபாய் இறந்து போனார். எனவே தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, தற்காப்புக்கலைகள் என்ற அனைத்தும் கற்றுக்கொண்டார். 

14வது வயதில் ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவரை 1842ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைப்பதுடன், ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.

1851ம் ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை தாமோதர ராவ் நான்கு மாதங்களில் இறந்து விட்டதால், ஆனந்த் ராவை தத்தெடுத்தார்கள். பின்னர் அந்த குழந்தைக்கு தாமோதர் ராவ் என பெயர் சூட்டப்பட்டது. புத்திர சோகம் மிகவும் கொடுமையானது. அந்த துயரில் இருந்து ராஜா கங்காதர ராவால் மீள முடியவில்லை. இதனால், நோய் வாய்ப்பட்ட அவர், 1853ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இறந்தார்.

பின்னர் வளர்ப்பு மகனை ஆட்சியில் அமர்த்த எண்ணினார். ஆனால் அப்போதைய ஆங்கிலேய ஆளுனர் டல்ஹவுசி பிரபு, பிரிட்டன் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கைப்படி, தத்துப்பிள்ளையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டை தமது ஆட்சிக்கு உட்படுத்த முடுவெடுத்தனர்.

இதையடுத்து ஜான்சி கோடையை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்தனர். எனவே ஜான்சி ராணிக்கு ரூ. 60 ஆயிரத்தை ஓய்வூதியமாகக் கொடுத்து கோட்டையைவிட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஆனால் ராணி வெளியேற மறுத்தார். அந்த நேரத்தில் மீரட்டில் கிளர்ச்சி ஏற்படவே, ஆங்கிலேயர்கள் அதில் கவனம் செலுத்தினார்கள். ராணி லட்சுமிபாயே ஜான்சியை ஆண்டு வந்தார். ராணி லட்சுமிபாய் அப்பகுதியை நன்றாகவே ஆட்சி செய்து வந்தார்.

இதனால் அஞ்சிய ஆங்கிலேயர்கள் அவர் மீது அதிகாரிகளை கொன்றதாக பழி சுமத்தினார்கள். மக்களிடம் ராணிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, 1858ம் ஆண்டு ஜான்சியின் மீது ஹீரோஸ் தலைமையில் போர் தொடுத்தனர். தாந்தியா தோபே இந்தப்போரில் ஜான்சிக்கு உதவுவதற்காக படையை அனுப்பிவைத்தார். ஆனால் அப்படையினர் ஆங்கிலேயர்களுடன் இணைந்துவிட்டது.

தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில், ஹீரோஸ் படையினர் அவர்களை தாக்கி, அவரின் 1,500 வீரர்களை கொன்று குவித்தனர். தாந்தியோ தோபேயும் புறமுதுகிட அவரது ஆயுதங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஜான்சிக்கு உதவ வந்த ஆயுதங்களாலே ஜான்சி மீது போர் தொடுக்கப்பட்டது.

ஆனாலும் ஜான்சி ராணி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து, அவர்களை எதிர்த்து கடுமையாக போர் புரிந்தார். ஆனாலும் அவரால் போராட முடியவில்லை. கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ராணி, தனது மகனுடன் சுவரேறி குதித்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ராணியை ஜான்சியைவிட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். அவர் பெண் படையுடன் பெரும் படையை திரட்டிக்கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து மீண்டும் போரிட்டார். 

1858ம் ஆண்டு ஜீன் 18ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்தார். அவரது நினைவு நாளில் அவரது வீர வரலாற்றை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.