Chucky: கனடாவில் திருமண விருந்தில் துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் ‘கேங்ஸ்டர்’ கொலை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chucky: கனடாவில் திருமண விருந்தில் துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் ‘கேங்ஸ்டர்’ கொலை!

Chucky: கனடாவில் திருமண விருந்தில் துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் ‘கேங்ஸ்டர்’ கொலை!

HT Tamil Desk HT Tamil
May 29, 2023 11:55 AM IST

Amarpreet (Chucky) Samra shot dead: சம்பவம் நடந்ததும் சவுத் வான்கூவர் விருந்து மண்டபத்திற்கு வெளியே அதிகாலை 1:30 மணியளவில் பலரும் பதட்டத்தோடு திரண்டனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட அமர்ப்ரீத் (சக்கி) சாம்ரா
சுட்டுக் கொலை செய்யப்பட்ட அமர்ப்ரீத் (சக்கி) சாம்ரா

கனடாவின்  ஃபிரேசர் தெருவில் அதிகாலை 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் 30 நிமிடத்திற்கு முன், அங்குள்ள ஃப்ரேசர்வியூ பேங்க்வெட் ஹால் என்கிற திருமண மண்டபத்தில் விருந்தினர்கள் அனைவரும் இருந்துள்ளனர். 

திருமணத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சாம்ரா மற்றும் அவரது மூத்த சகோதரர் ரவீந்தர் ஆகிய இருவரும், அங்கு நிகழ்ந்த நடன கொண்டாட்டடத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், DJ ஒலிபரப்பியவரிடம் இசையை நிறுத்தக் கூறியுள்ளனர். அப்போது சுமார் 60 விருந்தினர்கள் அந்த இடத்தில் இருந்துள்ளனர். 

அதன் பின் நடந்த மோதலில் தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் சாம்ரா கொல்லப்பட்டார்.

கனடாவின் வான்கூவர் போலீசாரின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி,  இன்று காலை 28 வயதுடைய இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்ததும் சவுத் வான்கூவர் விருந்து மண்டபத்திற்கு வெளியே அதிகாலை 1:30 மணியளவில் பலரும் பதட்டத்தோடு திரண்டனர். சம்பவம் அறிந்து அங்கு துணை மருத்துவர்கள் வரும் வரை ரோந்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தனர். இருப்பினும் சாம்ரா உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

இது இரு கும்பல்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  புலனாய்வாளர்களுக்கு உதவக்கூடிய தகவல் தெரிந்தவர்கள் வான்கூவர் காவல்துறையின் கொலைப் பிரிவுக்கு 604-717-2500 என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆகஸ்ட் 2022 இல், கனட போலீசார், வன்முறையில் தொடர்புடைய 11 ஆண்கள் பற்றி ஒரு அரிய எச்சரிக்கையை வெளியிட்டனர்.  எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேரில், அமர்பிரீத் மற்றும் அவரது சகோதரர் ரவீந்தர் உட்பட ஒன்பது பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணத்தில் நடந்த பல கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா காவல்துறை தெரிவித்துள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.