Puducherry Budget: புதுச்சேரி பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் என்ன? விபரம் இதோ…!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Puducherry Budget: புதுச்சேரி பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் என்ன? விபரம் இதோ…!

Puducherry Budget: புதுச்சேரி பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் என்ன? விபரம் இதோ…!

Karthikeyan S HT Tamil
Mar 13, 2023 12:26 PM IST

Puducherry Budget 2023: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த போது எடுத்த படம்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த போது எடுத்த படம்.

இதனைத் தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில், புதுவையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் எனவும், மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.  பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 ஆண்டு காலத்திற்கு நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தப்படும்.

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும்.  இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 126 கோடி ரூபாய் செலவாகும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துறைமுகத்தில் வணிக ரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தப்படும். புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணை இன பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், மின்துறைக்கு ரூ.1,946 கோடியும், மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ. 4.6 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.