தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இந்தியாவிலேயே நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவிலேயே நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Karthikeyan S HT Tamil
Mar 06, 2024 01:26 PM IST

India's first underwater metro: நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்தார் பிரதமர் மோடி.
நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்தார் பிரதமர் மோடி.

ட்ரெண்டிங் செய்திகள்

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 48.கி.மீ., இதற்கிடையே ஹூக்ளி ஆற்றை கடக்க 32 மீ ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ.4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் சேவையால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தினமும் 7 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையைத் தான் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியபடியே அதில் பயணித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்