Menstrual Hygiene day : ‘பீரியட்ஸ்’ பெண்கள் உடலின் இயற்கையான மாற்றம் என்பதை மாதவிடாய் சுகாதார தினத்தில் உரக்கக்கூறுவோம்!
சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. உள்ளூர் முதல் உலகம் வரை மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை இதன் ஆகும். மாதவிடாய் ஒரு சூழற்சி 28 நாட்கள், மாதவிடாய் நீடிப்பது சராசரியாக 5 நாட்கள் என்பதால் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாதவிடாய் சுகாதார தினம் என்பது மே 28ம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து உலகம் முழுவதும் அறிவுறுத்துவதற்காக நடத்தப்படுகிறுது. இதன் ஜெர்மனியைச் சேர்ந்த தன்னார்வத்தொண்டு நிறுவனம் வாஷ் யுனைடெட் என்பது 2014ம் ஆண்டு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. அது முதல் இந்த நாள் கொண்டாப்பட்டு வருகிறது.
வளரும் நாடுகளில் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் பொருட்களை பெண்கள் தேர்ந்தெடுப்பது விலை, இருப்பு மற்றும் சமூக கட்டமைப்பு ஆகிவற்றை பொறுத்து மாறுபடுகிறது. போதிய சுகாதார வசதிகள், பெண்களுக்கு சுகாதார பொருட்கள் கிடைக்கச்செய்வது முக்கியம். அதே நேரத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பது அதே அளவு முக்கியமானது.
பெண்களை பள்ளிகளில் இருந்து மாதவிடாய் காலங்களில் விலக்கி வைப்பதே இந்த மாதவிடாய்க்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள்தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே மாதவிடாய் சுகாதார தினத்தில் சமூக ஊடகங்கள் ஊடங்கள் உள்ளிட்ட பொது வெளிகளில் மாதவிடாய் குறித்து பேசி, அதன் பின் இருக்கும் ஒளிவுதன்மையை விலக்கி, வெளிப்படையாக அது குறித்து விவாதிப்பது இதன் நோக்கம். மேலும், உள்ளூர் முதல் உலக அளவில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.
வளரும் நாடுகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை, சுத்தமான தண்ணீர் கிடைக்காமை மற்றும் கழிவறை வசதிகள் இல்லாததால் பெண்களுக்கு பெரும் சவாலான ஒன்றுதான். கூடுதலாக கலாச்சாரம், பாரம்பரியம் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசவிடாமல் தடுத்து வைக்கிறது. இதனால் பெண் உடல் மற்றும் அதன் இயக்கங்கள் குறித்த இயற்கை விவரங்களை தெரிந்துகொள்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. இது பெண்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் மரியாதை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது. தகவல்களை தெரிந்துகொள்வது மனித உரிமையாகும். ஆனால் பல்வேறு தடைகளால் பெண்களுக்கு தகவல்களை தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே இந்த நாளின் நோக்கமே
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்களை பேசுவது. இந்த சவால்ககளுக்கு தீர்வுகள் காண்பது. பெண்களின் உரிமைக்காக பாடுபடுவது. சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. உள்ளூர் முதல் உலகம் வரை மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை ஆகும். மாதவிடாய் ஒரு சூழற்சி 28 நாட்கள், மாதவிடாய் நீடிப்பது சராசரியாக 5 நாட்கள் என்பதால் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாதவிடாய் சுகாதார தினம் 2023ம் ஆண்டின் கருப்பொருள், 2030க்குள் மாதவிடாய் என்பது இயற்கையான உடல் மாற்றம் என்பதை அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பதே ஆகும்.
மாதவிடாய் என்ற ஒரு காரணத்திற்காக பெண்கள் பாகுபாடு, தள்ளிவைப்பது, களங்கத்திற்கு ஆளாவது என்ற சித்தரவதைகளுக்கு இன்றும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்றும் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இயற்கையான உடல் மாற்றத்திற்காக படிக்க அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கும், வெளியே வேலைக்கு அனுப்பப்டாமல் இருப்பது மற்றும் தினசரி வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பது போன்ற விஷயங்களில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஒரு சிறிய உடல் இயக்கம் அவர்களின் அன்றாட வேலைகளை தடுப்தை இன்னும் அனுமதிக்ககூடாது.
மாதவிடாய் என்பதை சுற்றியுள்ள கட்டுக்கதைகள், ஒதுக்குதல் ஆகியவற்றை களையவேண்டும்.
மாதவிடாய் குறித்த கல்வி, மாதவிடாய்க்கு ஏதுவான சுகாதார வசதி, மாதவிடாய் பொருட்கள் பயன்படுத்துவதில் உள்ள சவால்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இதற்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குவது.
இவைதான் இந்த ஆண்டின் லட்சியம். 2030க்குள் யாரும் மாதவிடாயால் பின்தங்கியிருந்துவிடக்கூடாது என்பதாகும்.
டாபிக்ஸ்