North India Rain Update : புனேவுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் – வானிலை மையம் எச்சரிக்கை!
North India Rain : இந்திய வானிலை ஆய்வு மையம் மஹாராஷ்ட்ராவின் புனேவுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. அங்கு அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடா கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மஹாராஷ்ட்ராவின் புனேவுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக புதன் கிழமை இரவு அதிகன மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடா கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது 20-22ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறும் என்றும், அந்த புயல் சின்னம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி ஒடிஸ்ஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் நோக்கி அடுத்த ஓரிரு நாளில் நகரக்கூடும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவின் ஓரிரு இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு அதி கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கொமரம் பீம் அசிஃபாபாத், நிசாஃமாபாத், பத்ரத்ரி கொத்தகுடம், கம்மம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் கனமழை முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது.
ஹைதராபாத் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், நகரில் சில இடங்களில் அவ்வப்போது அதிக மழையும் பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் மழை என்பது 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ. மழையாகும். அடுத்த 24 மணி நேரத்தில் 204.5 மி.மீ முதல் மழை பெய்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.
குஜராத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொடிய கனமழையால் மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
டாபிக்ஸ்