Noble Prize:இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளரான அனி எர்னாக்ஸ்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தாங்கள் தேர்வு செய்துள்ள துறையில் பங்களிப்பு செய்பவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
82 வயதாகும் எர்னாக்ஸ்க்கு, எல் ஆக்குபேஷன் என்ற புத்தகத்தை எழுதியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாட்டுக்கு எதிராக நிலவும் மாறுபட்ட கருத்துகள் பற்றி தனது எழுத்துகளின் மூலம் துணிச்சலாக வெளிப்படுத்தி வந்ததற்கு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு நாளையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளது.