ஐநா கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதிகள்–விவாதித்த விஷயம்தான் ஹைலைட்டே
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஐநா கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதிகள்–விவாதித்த விஷயம்தான் ஹைலைட்டே

ஐநா கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதிகள்–விவாதித்த விஷயம்தான் ஹைலைட்டே

Priyadarshini R HT Tamil
Feb 25, 2023 07:47 PM IST

ஜெனிவா நாட்டில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

ஐநா கூட்டத்தில் பங்கேற்ற நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள்.
ஐநா கூட்டத்தில் பங்கேற்ற நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள்.

மேலும் கைலாசா நாட்டை அமெரிக்கா, ஐநா சபை ஆகியவை அங்கீகரித்துள்ளதாகவும் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

கைலாசா நாட்டின் சார்பில் விஜயபிரியா நித்யானந்தா, ஐநாவுக்கான நிரந்தர தூதர் முக்திகா ஆனந்தா, லாஸ் ஏஞ்சல்சின் கைலாசாவின் தலைவர் சோனா காமத், செயின்ட் லூயிஸ் கைலாசா தலைவர் நித்யா ஆத்மதயகி, பிரிட்டன் கைலாசா தலைவர் நித்யா வெங்கடேஷானந்தா, பிரான்ஸ் கைலாசாவின் தலைவர் ஸ்வோவேனி, பிரியாபிரேமா நித்யானந்தா ஆகியோர் பங்கேற்றார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பெண் முன்னேற்றம் குறித்து ஐநாவில் பிப்ரவரி 22ம் தேதி விவாதித்தார்கள். அதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். கைலாசவின் பெண் பிரதிநிதிகள் ஐநா கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். உலகில் பெண்களுக்கு பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரங்களை குறிப்பிட்டனர்.

5 மண்டலங்களில் உள்ள 85 சதவீத பெண் எம்பிக்கள் உளவியல் ரீதியான வன்முறை, பாலியல் வன்முறைகள், மிரட்டல்கள் உள்ளிட்டவற்றை சந்தித்துள்ளனர். 44 சதவீதம் பேர் கொலை மிரட்டல், பாலியல் வன்முறை, தாக்குதல் உள்ளிட்டவற்றை குடும்பத்துக்குள்ளாகவே சந்தித்துள்ளனர் என்பதையும் கூறினார். எனவே பெண்களுக்கு உண்மையான முன்னேற்றம் இருக்க வேண்டும். பாதுகாப்பு மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் கொடுக்க வேண்டும். அதற்கு கைலாசா

இந்த கூட்டம் குறித்து நித்யானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு,தேசம்மற்றும்உலகம்,பொழுதுபோக்கு,விளையாட்டு,லைஃப்ஸ்டைல்,ஜோதிடம்,புகைப்படகேலரி,வேலைவாய்ப்பு,சமீபத்தியசெய்திகள்எனஅனைத்தையும்இந்துஸ்தான்டைம்ஸ்தமிழ்இணையதளத்தில்உடனுக்குடன்தெரிந்துகொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.