Hindu Temple In Dubai: துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறப்பு!
துபாயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயில் நேற்று திறக்கப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. அங்கே அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில் இந்து கோயில்கள், சீக்கிய குருத்துவார், தேவாலயங்கள், புத்தர் கோயில்கள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கி கௌரவித்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பழமையான சிந்தி குரு தர்பார் இந்து கோயில் 1950 ஆம் ஆண்டு புர் துபாயில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரம்மாண்டமான மற்றொரு கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 148 கோடி ரூபாய் செலவில், துபாய் ஜபேல் பகுதியில் இந்து கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த கோயில் தற்போது துபாயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்து கோயிலான இந்த பிரம்மாண்டமான கோயில் நேற்று (அக்.4) திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய இந்து கோயிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மை துறை மந்திரி ஷேக் நஸ்யான் பின் முபாரக் அல் நஸ்யான் திறந்து வைத்தார். இந்த கோயிலின் உட் பிரகாரத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய மற்றும் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்