Natinol Science Day 2024: ராமன் விளைவுக்கும், தேசிய அறிவியல் தினத்தும் என்ன சம்பதம்? இதோ விவரம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Natinol Science Day 2024: ராமன் விளைவுக்கும், தேசிய அறிவியல் தினத்தும் என்ன சம்பதம்? இதோ விவரம்!

Natinol Science Day 2024: ராமன் விளைவுக்கும், தேசிய அறிவியல் தினத்தும் என்ன சம்பதம்? இதோ விவரம்!

Kathiravan V HT Tamil
Feb 28, 2024 07:00 AM IST

சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்புகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய அறிவியல் தினம் 2024
தேசிய அறிவியல் தினம் 2024

சர்.சி.வி.ராமன் உருவாக்கிய, ராமன் விளைவு கோட்பாட்டை இதே நாளில் உலகிற்கு அறிவித்தார் என்பதால் இந்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

ராமன் விளைவு நினைவாக தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986 ஆம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

சந்திர சேகர வெங்கட் ராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர்.சி.வி.ராமன் 1888 ஆம் ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் திருச்சியை அடுத்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். 

சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ல் இளங்கலை பட்டம் பெற்றாா். ராமன் இயற்பியல் துறையில் பல ஆராய்சிகள் செய்துள்ளாா். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் குறிப்பிடத்த பங்களிப்பாக இருந்தது. ஏனெனில் இது ஒளியின் குவாண்டம் இயல்பை நிரூபிக்கிறது. இது அறிவியலின் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியது.

ராமன் விளைவு என்றால் என்ன?

ராமன் விளைவு என்று அழைக்கப்படுவது ஒளியின் அலைநீளத்தில் (wavelength) ஏற்படும் மாற்றம் ஆகும். அதாவது ஒளிக்கற்றை ஒரு தூசியற்ற சாதனத்திற்குள் நுழைந்தால் அதன் ஒளிக்கற்றிலிருந்து சிறிய அளவிலான ஒளிசிதறல்கள் ஏற்படும். இந்த சிறிய ஒளிசிதறல்களின் அலைநீளம் உள்ளே அனுப்பப்பட்ட ஒளியின் அலைநீளத்தில் இருந்து சற்று மாறுபடும். இந்த மாற்றத்தை தான் ராமன் விளைவாக சி.வி.ராமன் கண்டுபிடித்தார்.

இந்த சிறப்பான கண்டுபிடிப்புக்குத்தான் அவருக்கு 1930ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ கிடைத்தது. அதன் பிறகு, சர்.சி.வி.ராமன் அவர்களுக்கு இந்திய அரசு நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘பாரத ரத்னா’ விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.