Nagaland: முதல் முறையாக எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமையும் ருசிகரம்!
Nagaland Assembly: நாகாலாந்தில் ஆளும் கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதால் அங்கு எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது.
நாகாலாந்தில் ஆளும் கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதால் அங்கு எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது. புதிய சட்டசபையும், அரசும் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமைவது இதுவே முதல்முறை.
வடகிழக்கு மாநிலமான நாகலாந்து சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மார்ச் 2-ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் என்.டி.பி.பி எனப்படும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
பிற கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்-7, நாகாலாந்து மக்கள் கட்சி-5, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்), அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி, ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
நாகாலாந்து மாநிலத் தேர்தலில் இதற்குமுன் இத்தனைக் கட்சிகள் வெற்றி பெற்றது கிடையாது.நாகலாந்து அரசியல் வரலாற்றில் இத்தனை கட்சிகள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சிகள் என்.டி.பி.பி - பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இதன்மூலம் நாகாலாந்தில் ஆளும் கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதால் அங்கு எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைந்துள்ளது. புதிய சட்டசபையும், அரசும் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமைவது இதுவே முதல்முறை.
இதனிடையே நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் 5ஆவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டாபிக்ஸ்