HT Auto Special: 48 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டப்பட்ட கார்!-சிலிர்க்க வைக்கும் சாதனை கதை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Auto Special: 48 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டப்பட்ட கார்!-சிலிர்க்க வைக்கும் சாதனை கதை

HT Auto Special: 48 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டப்பட்ட கார்!-சிலிர்க்க வைக்கும் சாதனை கதை

Manigandan K T HT Tamil
Jul 11, 2023 07:36 PM IST

வாங்கிய இரண்டே நாட்களில் 2400 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டிவிட்டு முதல் சர்வீஸ் செய்வதற்கு சர்வீஸ் சென்டரில் விட்டவர்.

48 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டப்பட்ட கார், அதன் உரிமையாளர் இர்வ் கோர்டான்
48 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டப்பட்ட கார், அதன் உரிமையாளர் இர்வ் கோர்டான்

பெரும்பாலான கார்களின் ஆயுட்காலம் இரண்டு லட்சம் கி.மீ.க்கு மேல் இல்லை என்றாலும், முறையான பராமரிப்பு மற்றும் வழக்கமான சர்வீஸ் மூலம் ஒரு காரின் ஆயுளை அதிகரிக்க முடியும் என்பதை இர்வ் கோர்டன் நிரூபித்துள்ளார்.

48 லட்சம் கி.மீ தூரம் பயணித்தது அவர் வாங்கிய வால்வோ கார் என்பதே அதற்கு சாட்சி.

அமெரிக்காவைச் சேர்ந்த இர்வ் கோர்டன் என்ற சாதாரண நபரால் வாங்கப்பட்ட கார் தான் இது. அப்போது அவருக்கே இந்தக் கார், 48 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என யோசித்திருப்பாரா என்றால் அப்படி இருக்க முடியாது என்பது யதார்த்தம்.

1966இல் வோல்வோ P1800 என்ற காரை வாங்கினார் இர்வ் கோர்டன்.

வாங்கிய இரண்டே நாட்களில் 2400 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டிவிட்டு முதல் சர்வீஸ் செய்வதற்கு சர்வீஸ் சென்டரில் விட்டவர்.

அவர் டிரைவிங் செய்வதில் அலாதி ப்ரியம் கொண்டவராக இருந்தார்.

'உண்மைதான் நான் டிரைவிங் செய்வதை மிகவும் விரும்புவேன்' என ஒரு முறை அவரே கூறியிருக்கிறார்.

அலாஸ்கா நகரில் வாங்கப்பட்ட வால்வோ 1800 கார் மற்றும் அதன் ஓட்டுநர் கமர்ஷியல் அல்லாத வாகனத்தில் ஒரு ஓட்டுநரால் அதிக மைல்கள் பயணம் செய்ததற்காக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

2013-இல் 48 லட்சம் கிலோ மீட்டரை இந்தக் காரில் நிறைவு செய்தார். நிலவை 7 முறை சுற்றி வந்ததற்கு சமம் இது. அவரது வாழ்நாளில் பெரும்பாலும் இந்தக் காரிலேயே அவர் கழித்திருக்கிறார்.

2018ம் ஆண்டு 78 வயதில் அவர் காலமானார். இறக்கும்போது பயணத்திலேயே இருந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மறைந்தார்.

இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அவரது உறவினருக்கு அனுப்பிய தகவலில் நான் மிகச் சிறந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறேன் என கூறியிருக்கிறார்.

அவரது மறைவுக்கு பிறகு, அவரது குடும்பத்தினரிடம் இருந்து மிகப் பெரிய விலையை கொடுத்து வோல்வோ நிறுவனம் அந்தக் காரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரு காரில் இத்தனை லட்சம் கிலோ மீட்டர் பயணித்த இர்வ் கோர்டனின் கதை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது அல்லவா!

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.