HBD Bill Gates: கணினி உலகில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிறந்தநாள்
பில்கேட்ஸ் சில புகழ் பெற்ற வாசகங்களை மேற்கோள் காட்டி இருந்தார். அதில் வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்கிறேன். ஒரு போதும் அவர்களின் வறுமையை அல்ல என்றார்.

நான் கடினமாக வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன். ஏனெனில் அவர்களால் தான் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும் இப்படி சொன்னது யார் தெரியுமா? ஆம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை கட்டமைத்த முதன்மை நிறுவனரான பில்கேட்ஸ்.
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிறந்த தினம் இன்று. இந்த நாளில் இவர் குறித்த முக்கிய தகவல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
அமெரிக்காவின் உள்ள சியாட் நகரில் 1955ம் ஆண்டு அக்டோபர் 28ல் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் ஹென்றி கேட்ஸ். வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது தாய் மேரி மேக்ஸ்வெல். இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சிறு வயதில் பில்கேட்ஸ் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டார். பொருளாதாரத்தில் வளம் மிக்க குடும்பத்தில் பிறந்த அவர் லேக் சைட் என்னும் பள்ளியில் படித்தார். அந்த பள்ளியில் படித்தபோதே தனது 13 வயதில் கணினியில் புரோகிராம் எழுத தொடங்கினார். ஒரு கட்டத்தில் பில்கேட்ஸ்ஸின் ஆர்வத்தை அறிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அவர் கணினி பயிற்சிக்காக பல சலுகைகளை வழங்கியது. உயர்கல்விக்கு பின் ஹார்வேர்டு பல்கலை கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார்.