Crime: ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட மாணவர் - அதிர்ச்சி அடைந்த போலீஸ்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட மாணவர் - அதிர்ச்சி அடைந்த போலீஸ்!

Crime: ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட மாணவர் - அதிர்ச்சி அடைந்த போலீஸ்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2023 05:26 PM IST

ஹைதராபாத்தில் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவர் தற்கொலை
கல்லூரி மாணவர் தற்கொலை

சில குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சில சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன. கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வது என்பது மிகவும் அரிது. அப்படி ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான பாப்பிரெட்டி நகரைச் சேர்ந்தவர் 21 வயதான தீட்சித் ரெட்டி. இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில், மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தீட்சித் ரெட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிக தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு இவர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை தடுப்பு உதவி எண்கள்
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்

இதன் காரணமாக தீட்சித் ரெட்டிக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் ரெட்டியின் பெற்றோர் வெளியூருக்குச் சென்று இருந்தனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அந்த நேரம் ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு கொடூரமாகத் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. வெளியூர் சென்றிருந்த ரெட்டியின் பெற்றோர் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெட்டியின் பெற்றோர், ஜன்னலைத் திறந்து பார்த்தபோது ரெட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனே காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ததைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.