Mayawati: தனது அரசியல் வாரிசை அறிவித்தார் மாயாவதி!-யார் இந்த ஆகாஷ் ஆனந்த்?
மாயாவதி தனது சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக வாரிசாக நியமித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் தனது அரசியல் வாரிசாக சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அறிவித்தார். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை மாயாவதி தொடர்ந்து கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார்...,” என்று கட்சியின் தலைவர் உதய்வீர் சிங் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாயாவதி தலைமையில் கட்சித் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்திறனை பகுப்பாய்வு செய்ய இக்கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், 2024 லோக்சபா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தனது அரசியல் வாரிசு குறித்து அறிவிப்பை மாயாவதி வெளியிட்டுள்ளார்.
யார் இந்த ஆகாஷ் ஆனந்த்?
2019 இல் மாயாவதியின் மக்களவை பிரச்சாரத்தின் போது ஒரு முக்கிய முகமாக பகுஜன் சமாஜ் கட்சியில் திகழ்ந்தார் ஆகாஷ் ஆனந்த், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன்தான் ஆகாஷ் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வியடைந்த பிறகு, சஹாரன்பூரில் நடந்த பேரணியில் ஆகாஷ் ஆனந்தை மாயாவதி அழைத்து வரப்பட்டார். அப்போது முதல் அவரது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.
மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றாகும்.
டாபிக்ஸ்