LED TV Explodes At UP : காசியாபாத்தில் பயங்கரம்-எல்இடி டிவி வெடித்து சிறுவன் பலி
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் எல்இடி டிவி வெடித்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பக்கத்து வீட்டு பெண் ஒருவர் கூறுகையில், ”பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்து விட்டது என்று நினைத்தேன். நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தோம். எங்கள் பக்கத்து வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டோம். பிறகு தான் தெரிந்தது எல்இடி டிவி வெடித்தது என்று. இந்த விபத்தின் போது வீட்டில் நான்கு பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிறுவன் ஓமேந்திரா மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது தாய்,சகோதரர் மற்றும் அவரின் நண்பர் மூவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”எனத் தெரிவித்தார்.
எல்இடி டிவி வெடித்ததில் முழு வீடும் அதிர்ந்து சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.