Maratha: மராத்தா இடஒதுக்கீடு: போராட்டத்தின் தீவிரத்தால் பயணத்தை ரத்து செய்த துணை முதல்வர்
மாநிலம் முழுவதும் உள்ள மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர்கள், அச்சமூகத்திற்கான ஓபிசி ஒதுக்கீட்டை மாநில அரசு நிறைவேற்றும் வரை அரசியல் தலைவர்கள் தங்கள் கிராமங்களில் நுழையத் தடை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான பரபரப்பு, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதிக்குச் செல்லும் திட்டத்தைத் திடீரென ரத்து செய்தார்.
முன்னதாக, அவரது நுழைவை மராட்டிய கிராந்தி மோர்ச்சா எதிர்த்தது. சொந்தவூரில் அக்டோபர் 27 நேற்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, அஜித் பவாரின் கட்டுப்பாட்டில் உள்ள மாலேகான் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இப்பருவத்திற்கான கரும்பு அரைக்கும் விழாவில், கலந்து கொள்வதற்காக அஜித் பவார் பாராமதிக்கு வருகை தருவதாக அவரது நெருங்கிய உதவியாளர்கள் தெரிவித்தனர்.
இதையறிந்து கொண்டு நேற்று கடந்த அக்டோபர் 27ல், மராத்தா எதிர்ப்பாளர்கள் மாலேகான் தொழிற்சாலைக்கு வெளியே அதிக அளவில் கூடினர். போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க கூடியிருந்த பகுதியில் கணிசமான போலீஸ் படை குவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர்கள், மராத்தா சமூகத்திற்கான ஓபிசி இடஒதுக்கீட்டை மாநில அரசு நிறைவேற்றும் வரை அரசியல் தலைவர்களைச் சூழ்ந்து போராடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்விவகாரத்தினால் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசியல்வாதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாராமதியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மராத்தா போராட்டக்காரர்கள் தற்போது ஆலைக்கு அருகில் உள்ள மாலேகானில் போராட்டத்திற்காக குவிந்துள்ளனர்.
அதேபோல், சாங்லியில், காவல் துறை அமைச்சர் சுரேஷ் காடேவுக்கு மராத்தா சமூகத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிப்பதாகக் கூறி, நடந்துகொண்டிருந்த யுவ சங்கர்ஷ் யாத்திரையை நிறுத்தி வைத்தார்.
இதற்காகப் பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மனோஜ் ஜரங்கே-பாட்டீல், மராத்தா சமூகத்தை இடஒதுக்கீட்டிற்காக ஓபிசி பிரிவில் சேர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
OBC நலன்களுக்காக, அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி சாதிச்சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு மாநில அரசுக்கு 40 நாள் கெடு விதித்த நிலையில், அக்டோபர் 25 அன்று, மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மீண்டும் ஜல்னாவின் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
ஜாரங்கே-பாட்டீல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மாதம், அவர் 17 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் செப்டம்பர் 14 அன்று முதலமைச்சர் ஷிண்டே மற்றும் பிற அமைச்சர்கள், பிரச்னையைத் தீர்க்க 30 நாட்கள் அவகாசம் கோரிய பின்னர் அதைக் கைவிட்டார்.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வாரம் ஜராங்கே-பாட்டீல் தங்களுக்குத் தனது ஆதரவை அளிக்கக்கோரி அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.