Sri Lanka: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!
இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு மற்றும் அங்கிருந்த தாய் மற்றும் மகளை தாக்கினர். மேலும் புத்த பிட்சுவையும், இரு பெண்களையும் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் புத்த பிட்சு, மற்றும் இரண்டு.பெண்களும் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 2 பெண்களும்,புத்த பிட்சுவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் புத்த பிட்சுவிடம் தாக்குதல் நடத்தி 8 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.