Mahatma Gandhi Memorial Day: காந்தியை பற்றி வெளி உலகிற்கு தெரியாத டாப் 10 உண்மைகள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mahatma Gandhi Memorial Day: காந்தியை பற்றி வெளி உலகிற்கு தெரியாத டாப் 10 உண்மைகள்!

Mahatma Gandhi Memorial Day: காந்தியை பற்றி வெளி உலகிற்கு தெரியாத டாப் 10 உண்மைகள்!

Kathiravan V HT Tamil
Jan 30, 2024 04:30 AM IST

”Martyrs' Day 2024: மூன்று தோட்டாக்கள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. சம்பவ இடத்திலேயே மகாத்மா இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோட்சேவுக்கு நவம்பர், 1949ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது”

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி (X)

மூன்று தோட்டாக்கள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. சம்பவ இடத்திலேயே மகாத்மா இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோட்சேவுக்கு நவம்பர், 1949ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 மகாத்மா காந்தியைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள் இங்கே:

டைம் இதழின் மரியாதை

1930 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை மகாத்மா காந்தி பெற்றார். இந்த சிறப்பைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் மகாத்மா காந்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரிஷ் உச்சரிப்பு

காந்தி தனது ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர் ஐரிஷ்காரர் என்பதால் ஐரிஷ் மொழி உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலம் பேசினார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைகள்

அகிம்சை போராட்டத்தை வலியுறுத்தும் மகாத்மா காந்தி அடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு ஒரு முறை கூட அந்த விருது வழங்கப்படவில்லை.

‘மகாத்மா’ பட்டம்

காந்தியடிகளுக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை, வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார்.

2 தலைவர்களின் பிறந்த நாள்

மகாத்மா காந்தி தனது பிறந்த நாளை 1904ஆம் ஆண்டு பிறந்த லால் பகதூர் சாஸ்திரியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இறுதி ஊர்வலம்

மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் 8 கிலோ மீட்டர்கள் வரை நீண்டது.

காந்தியின் பெயரிடப்பட்ட சாலைகள்

இந்தியாவிற்கு வெளியே 48 சாலைகளுக்கும் நாட்டிற்குள் 53 சாலைகளுக்கும் மகாத்மா காந்தியின் என பெயரிடப்பட்டு உள்ளன.

ஹென்றி ஃபோர்டின் பாராட்டு

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, மகாத்மா காந்தியின் தீவிர அபிமானி என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அமைதி தினம்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் வரை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை காந்தியின் கொள்கைகளை மதிக்கும் வகையில் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.