Madhya Pradesh Results 2023:மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? - முன்னிலை நிலவரம் இதோ..!.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (டிச.3) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.
அதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாஜக 138 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிற நிலையில், காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பிற கட்சிகள் 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளன.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திர சிங் தோமர் திமோனி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இந்தூர் -1 தொகுதியிலும் பாஜக வேட்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை 20 ஆண்டுகாலமாக பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இங்கு ஆளும் பாஜக 5ஆவது முறையாக ஆட்சியை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக பிரசாரம் செய்தது. இந்த மாநிலத்தில் இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தன. இந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்