Madhya Pradesh Results 2023: ஆளும் கட்சிக்கு டப் கொடுத்து முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த ஆதிவாசி கட்சி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Madhya Pradesh Results 2023: ஆளும் கட்சிக்கு டப் கொடுத்து முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த ஆதிவாசி கட்சி!

Madhya Pradesh Results 2023: ஆளும் கட்சிக்கு டப் கொடுத்து முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த ஆதிவாசி கட்சி!

Karthikeyan S HT Tamil
Dec 03, 2023 04:46 PM IST

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாரத ஆதிவாசி கட்சி முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாரதிய ஆதிவாசி கட்சி
பாரதிய ஆதிவாசி கட்சி

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாஜக 161 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை எனும் நிலையில், பாஜக இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைய உள்ளது.

இந்த நிலையில், ரத்லாம் மாவட்டத்தின் சைலானா தொகுதியில் போட்டியிட்ட பாரத ஆதிவாசி கட்சி முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் எதிர்த்து களமிறங்கிய அக்கட்சியின் வேட்பாளர் கமலேஷ்வர் தோடியார் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத ஆதிவாசி கட்சி, மத்திய பிரதேசத்தில் எந்தத் தேர்தலிலும் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த முறை சைலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஹர்ஷ் விஜய் கெலாட்டை 4,618 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் கமலேஷ்வர். காங்கிரஸ் வேட்பாளர் 66601 வாக்குகளும், பாஜக வேட்பாளரான சங்கீதா விஜய் சரல் 41584 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டிகள் நிலவும் என்று தெரிவித்திருந்தன. இந்த நிலையில், முதன் முறையாக பாரதிய ஆதிவாசி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஆதிவாசி கட்சி புதிய பரிமாணம் எடுத்துள்ளது. ரத்லாமின் சைலானா தொகுதி ராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.